News & Events

 

விருந்தோம்பல் துறையில் சிறப்பாகசெயலாற்றுவோரைகௌரவிக்கும் வகையில் ‘Rising Star of Hospitality 2017’ ஏற்பாடு

21-06-17

நாட்டின் விருந்தோம்பல் துறையில் காணப்படும் இளைஞர்களில் சிறப்பாக தமது திறமைகளை வெளிப்படுத்துவோரை கௌரவிக்கும் வகையிலான நாடு தழுவிய முதலாவது போட்டித்தொடர் ஒன்றை ஏற்பாடு செய்யவுள்ளதாக இலங்கை ஹோட்டல் சம்மேளனம் (THASL) கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அறிவித்திருந்தது. இந்த போட்டியின் ஏற்பாட்டாளரான இலங்கை ஹோட்டல் சம்மேளனம் (THASL) ,ன் தலைவரும் ஏற்பாட்டுக்குழுவினரின் பங்குபற்றலுடன் இந்த சந்திப்பு இடம்பெற்றது. இதன் போது ‘Rising Star of Hospitality 2017’ வெற்றிக்கிண்ணமும் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. அத்துடன் இலங்கை ஹோட்டல் சம்மேளனம் (THASL) ன் புத்துருவாக்கம் பெற்ற இணையதளமும் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.

இந்த அமைப்பில் அங்கத்துவம் பெற்ற நாடளாவிய ரீதியில் காணப்படும் 200 அங்கத்துவ ஹோட்டல்களில் பணியாற்றும் இளம் ஊழியர்களுக்கு இந்த போட்டியில் பங்கேற்கமுடியும். ஒன்பது பிரிவுகளில் இந்த போட்டி நடைபெறும் என்பதுடன் சிறந்த இயலுமைகள் ,திறமைகள் மற்றும் பிரத்தியேக ஆளுமைகள் போன்றவற்றை நிபுணத்துவம் கொண்ட நடுவர்கள் மதிப்பீடு செய்வார்கள்.

இந்த விடயம் தொடர்பில் இலங்கை ஹோட்டல் சம்மேளனம் (THASL) ன் தலைவர் சனத் உக்வத்த கருத்துத் தெரிவிக்கையில் 'இன்று நாட்டில் 22000 நட்சத்திர அந்தஸ்து பெற்ற ஹோட்டல் அறைகள் காணப்படுகின்றன. 2020ல் இந்த எண்ணிக்கை மேலும் 6500ஆல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்சமயம் மொத்த முதலீடு 3 பில்லியன் அமெரிக்க டொலர்களை விட அதிகமாக அமைந்துள்ளது. இந்தத் தொகை 2020ல் மேலும் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களால் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது நாட்டில் எந்தவொரு துறையிலும் மேற்கொள்ளப்பட்டுள்ள மிகவும் உயர்ந்த முதலீட்டு தொகையாக அமைந்துள்ளது. மேலும் சுற்றுலாப்பயணிகளின் வருகை மூலமாக பெறப்படும் தேறியவருமானம் 3.5 பில்லியன் அமெரிக்க டொலர்களைவிட அதிகமாக காணப்படுகிறது. ஏற்றுமதியுடன் தொடர்புடைய ஏனைய துறைகளைபோலன்றி இந்ததுறையிலிருந்து பெறப்படும் தொகை நாட்டினுள்ளே காணப்படுகிறது என்றார். மேலும் தெரிவிக்கையில் 'நாட்டுக்கு அதிகளவு வருமானத்தை பெற்றுக்கொடுக்கக்கூடிய துறையாக சுற்றுலாத்துறை காணப்படுகிறது. இது பாரியளவு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளை தோற்றுவிப்பது மட்டுமின்றி பெருமளவு முதலீடுகளையும் கவரும் வகையில் அமைந்துள்ளது. இதனூடாக நாட்டுக்கு தேவையாக அந்நியச் செலாவணியை பெற்றுக்கொள்ளக்கூடியதாக அமைந்துள்ளது. துறையினால் வழங்கப்படும் கவர்ச்சிகரமான அம்சங்களுக்கு மேலதிகமாக இந்த துறையில் காணப்படும் வாய்ப்புகள் பற்றி இளைஞர்கள் அறிந்திருப்பதில்லை. எமது துறையில் முதல் தடவையாக இந்த இளம் நட்சத்திரங்களை இனங்கண்டு அவர்களுக்கு கௌரவிப்பை பெற்றுக்கொடுக்க நாம் தீர்மானித்துள்ளோம். THASL Rising Stars விருது சிந்தனை வெளிப்பாடாக அமைந்துள்ளதுடன் முழு துறையும் ஆர்வத்துடன் இந்த போட்டியை எதிர்பார்த்துள்ளது. இந்த மாபெரும் நிகழ்வு ஒக்டோபர் 24ம் திகதி BMICH ல் நடைபெறும்” என்றார்.

விருந்தோம்பல் துறையில் The Rising Star போட்டி18 – 27 வயதுக்குட்பட்ட இளைஞர்களை இலக்காகக் கொண்டு முன்னெடுக்கப்படுகிறது. மூன்று கட்டங்களில் இந்த போட்டிகள் நடைபெறும். முதல் கட்டத்தின் போது தொழிலுக்கு அவசியமான ஆளுமைகள் மற்றும் திறன்கள் மதிப்பீடுசெய்யப்படும். இது பிராந்தியமட்டத்தில் முன்னெடுக்கப்படும். இரண்டாம் கட்டம் விண்ணப்பதாரிகளின் விண்ணப்பப்படிவங்களில் வழங்கப்பட்டுள்ள விவரங்களின் பிரகாரம் மதிப்பீடு செய்யப்படுவார்கள். மூன்றாவதும் இறுதியானதுமான நிலையில் முன்னைய சுற்றுக்களிலிருந்து பெறப்பட்ட மீளாய்வுகளின் அடிப்படையில் போட்டியாளர்கள் மதிப்பாய்வு செய்யப்படுவார்கள். இதில் உயர் புள்ளிகளை பதிவுசெய்வோர் நேர்முகத்தேர்வுக்கு தோற்றுவார்கள்.

போட்டியில் உயர் புள்ளியை பெறுபவர் வெற்றியாளராக தெரிவுசெய்யப்படுவார். ஓன்பது பிரிவுகளில் இந்த வெற்றியாளர் தெரிவு செய்யப்படுவதுடன் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலைகளுக்குரியவர்களும் தெரிவுசெய்யப்படுவார்கள். Concierge / Bell Hop, Receptionist, Public Area Attendant, Room Attendant, Steward / Waiter, Kitchen Steward, Bartender, Pool Attendant/Lifeguard மற்றும் Telephone Operator போன்ற ஒன்பது பிரிவுகளில் இவர்கள் தெரிவுசெய்யப்படுவார்கள். முதல் மற்றும் இரண்டாம் சுற்றுகளிலிருந்து தகைமைகளைபெறும் போட்டியாளர்கள் தலா 35% புள்ளிகளை பெறுவார்கள். இறுதிப்போட்டியில் பங்குபற்ற 45 போட்டியாளர்கள் தெரிவுசெய்யப்படுவார்கள்.

The Rising Star of Hospitality 2017 இனால் வெற்றியாளராக தெரிவு செய்யப்படுபவருக்கு விசேடமான விருதொன்றை வழங்கும். வெற்றியாளர்களை தெரிவுசெய்வதற்கு ளுஆளு வாக்களிப்பு முறை ஒன்றும் நடைபெறும்.

(THASL) பற்றி
இலங்கை ஹோட்டல் சம்மேளனம் என அழைக்கப்படும் வுர்யுளுடு இலங்கையின் முழு ஹோட்டல் துறையின் கண்காணிப்பு அமைப்பாக திகழ்கிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 200க்கும் அதிகமான ஹோட்டல்கள் இந்தஅமைப்பில் அங்கத்துவத்தைக் கொண்டுள்ளன. இதில் புகழ்பெற்ற சர்வதேச நாமங்கள் முன்னணி ஹோட்டல் தொடர்கள்,உரிமையாண்மையின் கீழ் இயங்கும் ஹோட்டல்கள் மற்றும் நியம ஹோட்டல்கள் அத்துடன் நட்சத்திர அந்தஸ்து கொண்ட ஹோட்டல்கள் முதல் புட்டிக் ஹோட்டல்கள் போன்றன அடங்கியுள்ளன.

Mr. Sanath Ukwatte
President – The Hotels Association of Sri Lanka
T: 011 271 1711
F: 011 273 8548